சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றம்..!

174

முதல்வர் உட்பட அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தில் 2013ம் ஆண்டு இயற்றப்பட்ட லோக் ஆயுக்தா சட்டம், நேற்று தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார். தலைவர் மற்றும் 4 பேர் கொண்ட உறுப்பினர்கள் லோக்ஆயுக்தா அமைப்பில் இடம்பெற்று இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், முதலமைச்சர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய குழுவின் பரிந்துரை அடிப்படையில், லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை முதல்வர் தலைமையிலான தேர்வு குழு நியமிக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, உரிய விவாதத்திற்கு பிறகு சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதா உட்பட 18 மசோதாக்கள் சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து மறுதேதி குறிப்பிடாமல் சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.