லோக் ஆயுக்தா அமைப்பை உடனடியாக அமைக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

322

தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க லோக் ஆயுக்தா அமைப்பை உடனடியாக அமைக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குட்கா ஊழல் விசாரணை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த, இந்த வழக்கை தமிழக அரசே தானாக முன்வந்து சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
குட்கா ஊழல் பற்றி விசாரணை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் மீதான 12 கோடி ஊழல் புகார் குறித்து அவரிடம் உயர்நீதிமன்றம் விளக்கம் கோரியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரிக்க தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும் தமது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.