500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு வந்துள்ள பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

169

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு வந்துள்ள பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்களுக்கு வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமாக சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்திருந்தனர். மத்திய அரசின் திடீர் அறிவிப்பால், பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஏ.டி.எம். மையம் செயல்படவில்லை, கையில் இருக்கும் பணமும் செல்லாது என்ற நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்லக்கூட முடியாமல் பயணிகள் தவித்து வருகின்றனர்.