500,1000 ரூபாய் நோட்டுகளின் தடை காரணமாக, நாட்டு மக்களின் வருமானம் குறைந்து விட்டதாக லோக்கல் சர்க்கிள் ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

280

500,1000 ரூபாய் நோட்டுகளின் தடை காரணமாக, நாட்டு மக்களின் வருமானம் குறைந்து விட்டதாக லோக்கல் சர்க்கிள் ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசால் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் பெரும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன்காரணமாக ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து லோக்கல் சர்க்கிள் என்ற சமூக வலைதளம் ஆய்வு மேற்கொண்டது. நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் சுமார் 15 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 90 சதவீதம் வணிகர்கள் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பிறகு, தங்களது வருமானம் குறைந்துள்ளதாக தெரிவித்தனர். குறிப்பாக பிகார், ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் வசிப்போர் தங்களது வருமானம் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறினர்.