பாகிஸ்தானுடன் எல்லையில் நடைபெறும் வர்த்தகம் நிறுத்தம் : மத்திய அரசு அறிவிப்பு

247

பாகிஸ்தான் உடன் எல்லைப்பகுதியில் நடைபெற்று வரும் வர்த்தகத்தை மொத்தமாக நிறுத்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தானுடன் இந்தியா வர்த்தகம் செய்து வருகிறது. இந்த நிலையில், எல்லைப்பகுதியில் நடைபெற்று வரும் வர்த்தகத்தை திடீரென மொத்தமாக நிறுத்த போவதாக தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து, இனி இந்தியர்கள் எல்லையில் பாகிஸ்தானுக்கு பொருட்களை விற்க முடியாது என்பதால், இதுவரை எல்லையில் வர்த்தகம் செய்து லாபம் அடைந்து வந்த இந்திய வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லை வர்த்தகத்தை பயன்படுத்தி போலி ரூபாய் நோட்டுகளை கடத்துவதாகவும், ஆயுதங்களை கொண்டு வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. இதனால்தான் இந்த தடையை விதித்ததாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.