1.78 லட்சம் கோடி ரூபாய் வரை வாராக்கடன் வைத்துள்ள நாட்டின் மிகப் பெரிய 12 நிறுவனங்களிடம் இருந்து, பணத்தை வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

795

1.78 லட்சம் கோடி ரூபாய் வரை வாராக்கடன் வைத்துள்ள நாட்டின் மிகப் பெரிய 12 நிறுவனங்களிடம் இருந்து, பணத்தை வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் நிலவரப்படி, வங்கிகளின் மொத்த வாராக் கடன், 7 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்து வருகிறது. இந்த கடனை வசூலிக்க சமீபத்தில் ரிசர்வ் வங்கி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி, கடன் பாக்கி வைத்துள்ள நிறுவனங்கள் மற்றும் தனிநபர் சொத்துக்களை பறிமுதல் செய்யும் பணியை ரிசர்வ் வங்கி துவக்கியுள்ளது. அதில், அதிகளவில் வாராக் கடன் வைத்துள்ள, 12 நிறுவனங்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஆனால், இந்த 12 நிறுவனங்களின் பெயர்களை, ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. இதன் மூலம் 1 லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாய் பணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடனை 270 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்தாவிட்டால், அந்த நிறுவனத்தை திவாலானதாக அறிவித்து அதன், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.