மதுபானம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து | ரூ.70 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் உடைந்து நாசம்..!

834

செங்கல்பட்டு அருகே லாரி கவிழுந்து விபத்துக்குள்ளானதில் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் நாசமாகின.
புதுக்கோட்டையில் உள்ள தனியார் மதுபான ஆலையிலிருந்து 52 ஆயிரத்து 800 மதுபாட்டில்களுடன் திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையை நோக்கில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே இந்த லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியிலிருந்த 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் உடைந்து நாசமாகின. தகவலறிந்து அங்கு வந்த போலீசார் லாரியை அப்புறப்படுத்தினர். இந்த விபத்தால் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.