சர்வதேச சிங்கங்கள் தினம் அனுசரிப்பு..!

518

சர்வதேச சிங்கங்கள் தினத்தை முன்னிட்டு லண்டன் பூங்காவில் சிங்கங்களுக்கு பல்வேறு விளையாட்டு பொருட்கள் கொடுத்து மகிழ்விக்கப்படுகின்றன.

சர்வதேச சிங்கங்கள் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 11-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஆசியாவில் இருந்து லண்டன் பூங்காவுக்கு ஹெய்தி , இன்டி, ரூபி என்ற பெண் சிங்கங்கள் புதிதாக கொண்டுவரப்பட்டன. இந்த சிங்கங்களுக்கு விளையாட்டு சாதனங்களைக் கொடுத்து பூங்கா ஊழியர்கள் உற்சாகப்படுத்தி வருகின்றனர். இதற்கென பெரிய அளவில் பல வண்ணங்களில் பந்துகளை வடிவமைத்து, அதில் மூலிகைகள் மற்றும் வாசனை திரவியங்களை சேர்த்து, பெண் சிங்கங்களுக்கு வழங்கப்பட்டன. இந்த பந்துகளை காலால் உதைத்தும், வாயால் கடித்தும் சிங்கங்கள் மகிழ்ச்சியுடன் விளையாடின. இதனை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.