லிங்காயத் சமூகத்தை தனி மதமாக கர்நாடக மாநில அமைச்சரவை அங்கீகரித்துள்ளது..!

515

லிங்காயத் சமூகத்தை தனி மதமாக கர்நாடக மாநில அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.கர்நாடகா மக்கள் தொகையில் 17 சதவீதம் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்கள். 12ஆம் நூற்றாண்டில் பசவேசர் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட இந்த சமூகத்தின் கொள்கைகளின்படி சிவனை பிரதானமான கடவுளாக வழிப்படுகின்றனர். இந்நிலையில் லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அறிவிக்க கோரி கர்நாடகாவில் போராட்டம் வெடித்தது. இதனையடுத்து நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையிலான கமிட்டி தனது அறிக்கையை சமர்பித்தது. இதனை ஏற்று லிங்காயத் சமூகத்தை தனி மதமாக கர்நாடக அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. மேலும் மத்திய அரசும் லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்று கர்நாடக அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.