கருணாநிதி மறைவுக்கு விஜயகாந்த் நினைவு கடிதம்..!

977

திமுக தலைவர் கருணாநிதியுடன் பழகிய நாட்களை எண்ணி வியக்கிறேன், விம்முகிறேன் என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது நினைவுகளை கவிதை வடிவில் வெளியிட்டார்.

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கண்ணீர் மல்க வீடியோவை வெளியிட்டார். இதனை தொடர்ந்து கவிதை வடிவில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கருணாநிதியுடன் பழகிய நாட்களை நினைவுபடுத்தினார். உங்கள் உடல் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும், உங்கள் சரித்திரம் சகாப்தமாய் என்றும் எங்களுடனேயே இருக்கும் உங்களை வணங்குகிறேன் என விஜயகாந்த் குறிப்பிட்டார். மேலும் கடிதம் முடிவில் கருணாநிதி தன்னை விஜி என்று செல்லமாக அழைப்பதை நினைவுபடுத்தும் வகையில், இப்படிக்கு உங்கள் விஜி என்னும் விஜயகாந்த் என அவர் குறிப்பிட்டுள்ளார்.