பிறந்து சில நாட்களே ஆன சிறுத்தை குட்டிகளுக்கு நாய் ஒன்று பால் புகட்டும் வீடியோகாட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஷ்யாவின் வால்டிவொஸ்டோக்கிலுள்ள சடோகோர்ட் மிருகக்காட்சிசாலையில் கடந்த மாதம் பிறந்த இரு சிறுத்தை குட்டிகளுக்கு அதன் தாய் பால் புகட்ட மறுத்தது. இதனையடுத்து அந்த பூங்காவில் உள்ள டெஸ்சி என்ற நாய் சிறுத்தை குட்டிகளுக்கு பால் புகட்டி வருகிறது. 4 நாய் குட்டிகளை ஈன்றுள்ள டெஸ்சி சிறுத்தை குட்டிகளையும் தனது குழந்தையாக பாவிப்பது காண்போரை அதிசயிக்கச் செய்கிறது.