கந்துவட்டி கொடுமைக்கு கண்டனம் : உண்ணாவிரதம் இருக்க முயன்ற சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது செய்யப்பட்டார்..!

222

கந்துவட்டி கொடுமையை கண்டித்து நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது செய்யப்பட்டார்.
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இசக்கிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் தீக்குளித்து மரணத்தை தழுவினார். கந்து வட்டி கொடுமையை கண்டித்தும், இசக்கிமுத்து புகார் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சட்டக் கல்லூரி மாணவி நந்தினி, தனது தந்தையுடன் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்றார். கோரிக்கை அட்டையுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவரை, போலீசார் கைது செய்தனர்.