தமிழகத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்கியது.

252

தமிழகம் முழுவதும் உள்ள சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப்படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவ – மாணவிகளுக்கான கலந்தாய்வு, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி வளாகத்தில் தொடங்கியது. கலந்தாய்வை தொடங்கி வைத்த அமைச்சர் சி.வி.சண்முகம், முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சட்டக்கல்லூரி அனுமதி ஆணைகளை வழங்கினார். எதிர்வரும் ஜூலை 24-ஆம் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.