முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து பழம்பெரும் நடிகை லதா ஆதரவு தெரிவித்துள்ளார்.

259

முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து பழம்பெரும் நடிகை லதா ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பாண்டியராஜன், முனுசாமி, பொன்னையன், மதுசூதனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், தமிழகம் முழுவதும் மேற்கொள்ள உள்ள நீதி கேட்கும் சுற்றுப்பயணம் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆதரவு அதிமுக நிர்வாகிகளுடன் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். மேலும், ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் குறித்தும் விவாதித்தாக கூறப்படுகிறது. இதேபோன்று, உள்ளாட்சி தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய பிரச்சார உக்தி குறித்தும், சசிகலா அணியிடமிருந்து இரட்டை இலை சின்னத்தை மீட்பது குறித்தும் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். இதனிடையே, பழம்பெரும் நடிகை லதா ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அதிமுகவின் உண்மையான விசுவாசிகள் பன்னீர்செல்வம் அணிக்கு வரவேண்டும் என்று கூறினார்.