ராணுவத்தினரின் என்கவுண்டரில் லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாதி சுட்டுக்கொலை | இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் முறியடிப்பு.

195

காஷ்மீரின் ஹாஜின் பகுதியில் ராணுவத்தினர் இன்று நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் லஷ்கர் ஈ தொய்பா தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பண்டிப்போரா மாவட்டத்தில் உள்ள ஹாஜின் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருககு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, இன்று காலை அந்த பகுதியை சுற்றி வளைத்து, பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, மறைந்திருந்த தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதை அடுத்து, ராணுவத்தினர் அதற்கு தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்பினரிடயே நடைபெற்ற மோதலில், தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். உயிரிழந்த தீவிரவாதி பாகிஸ்தான் லஷ்கர் ஈ தொய்பா அமைப்பைச்சேர்ந்த அபு முசைப் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, அந்த பகுதியில் வேறு தீவிரவாதிகள் யாராவது பதுங்கியுள்ளனரா? என ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.