கடலூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு வழங்க வைத்திருந்த மடி கணினிகள் திருட்டு..!

97

கடலூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு வழங்க வைத்திருந்த மடி கணிணிகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி சேப்பாக்கம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 39 மடிக்கணினிகள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முகமூடி அணிந்து வந்த 4 பேர் இரவு காவலாளியை கத்தியை காட்டி மிரட்டி பள்ளியில் இருந்த 22 மடிக்கணினிகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இந்த கொள்ளை சம்பவவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.