லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை!

824

மாட்டு தீவன ஊழல் வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீகாரில் கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக 5 வழக்குகள் தொடரப்பட்டன. ஒரு வழக்கில் ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், மற்றொரு வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என பாட்னா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து லாலு பிரசாத் உள்ளிட்டோர் ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், லாலு பிரசாத் உள்ளிட்ட 15 பேர் குற்றவாளிகள் என கடந்த மாதம் 23 ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்தநிலையில், மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை விவரங்களை ராஞ்சி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஷிவ்பால் சிங் அறிவித்தார். அதன்படி, லாலு பிரசாத் யாவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.