லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதியின் கோடிக்கணக்காக சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர் !

366

பினாமி நில மோசடி வழக்கில் லாலு பிரசாத்தின் மகள் மிசா பாரதியின் கோடிக்கணக்காக சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.
மத்திய ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் இருந்தபோது, அவருடைய மகள் மிசா பாரதி, ஏராளமான நிலங்கள், வீடுகள் மற்றும் போலி நிறுவனத்தின் பெயரில் பினாமி சொத்துக்கள் வாங்கி குவித்தார். டெல்லியில் மட்டும் ஆயிரம் கோடி அளவில் சொத்துக்கள் பினாமி பெயரில் வாங்கியதாகவும் தெரிகிறது.இதுதொடர்பாக அமகலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்றத்திற்கு உதவிய ராஜேஷ் குமார் அகர்வால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறையினர் தனியாக வழக்கு பதிவு செய்து, மிசா பாரதி மற்றும் அவரது கணவர் சைலேஷ்குமார் ஆகியோருக்கு நேரில் ஆஜராக ஆணை பிறப்பித்தது. இதனை அவர்கள் இருவரும் புறக்கணித்து விட்டனர். இதனிடையே டெல்லியில் வாங்கிய ஒரு வீட்டை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.