கால்நடை தீவன முறைக்கேட்டில் லாலுவிற்கு சிறை..!

335

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை வருகிற 27-ம் தேதி வரை நீடித்து ஜார்க்காண்ட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பீகார் மாநில முன்னாள் முதல்வராக இருந்த ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் கால்நடை தீவன முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே அவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டதால், 6 வாரக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மேலும் சில நாட்களுக்கு ஜாமீனை நீடிக்க கோரி அவரது சார்பில் ஜார்க்காண்ட் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், வருகிற 27-ம் தேதி வரை அவரது ஜாமீனை நீடித்து உத்தரவிட்டது.