பாஜகவினரை ராமர் தண்டிக்கும் காலம் வெகுத்தூரத்தில் இல்லை- பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ்!

311

பாஜகவினரை ராமர் தண்டிக்கும் காலம் வெகுத்தூரத்தில் இல்லை என பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு, பாஜகவினர் இந்து கடவுளான ராமரின் பெயரை தவறாக பயன்படுத்தி வருவதாகவும், உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத், ராமர் பெயரை கூறி ஆட்சி செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், பணமதிப்பு விவகாரம் உள்ளிட்ட செயல்களால் மக்கள் விரோத போக்கை கடைப்பிடித்து வரும் பாஜகவிரை ராமர் தண்டிக்கும் காலம் வெகுத்தூரத்தில் இல்லை என தெரிவித்தார்.