வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ் மகளுக்கு சி.பி.ஐ. சம்மன் ..!

931

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்கில் நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு லாலு பிரசாத் யாதவ் மகளுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
ரயில்வே அமைச்சராக இருந்தபோது ரயில்வேக்கு சொந்தமான உணவகத்தை தனியாருக்கு குத்தகைக்கு விட்டதாக லாலு பிரசாத் யாதவ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு கைமாறாக மூன்று ஏக்கர் நிலத்தை பெற்றதாக கூறி லாலு பிரசாத் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு கடந்த ஜூலை மாதம் லாலு பிரசாத் யாதவ், அவரது மகள் மிசாபாரதி ஆகியோருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. ஆனால், இருவரும் ஆஜராவதற்கு கூடுதல் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் கண்டிப்பாக ஆஜராகவேண்டும் என லாலு பிரசாத் யாதவ் மகளுக்கு சி.பி.ஐ. மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.