குவைத்தில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 இந்தியர்கள் உட்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்..!

1750

குவைத்தில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 7 இந்தியர்கள் உட்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.குவைத்தில் எண்ணெய் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலையை முடித்து விட்டு இருப்பிடத்திற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பர்கான் பீல்டு என்ற பகுதி அருகே இந்த பேருந்து எதிரே வந்த மற்றொரு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 7 இந்தியர்கள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலர் உயிருக்கு போராடி வருவதால் பலி எண்ணைக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.