குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மிதமான நீர்வரத்து காரணமாக, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

328

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் மிதமான நீர்வரத்து காரணமாக, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த குற்றாலத்தில் தற்போது சீசன் நிலவி வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்தநிலையில், குற்றாலம் மற்றும் தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரங்களில் மிதமான சாரல் மழை பெய்துவருவதால், அருவிகள் அனைத்திலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருவதால், அவர்கள் நீண்ட வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.