போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை அனுமதிக்க முடியாது என்று இலங்கை அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

204

போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை அனுமதிக்க முடியாது என்று இலங்கை அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்ற போது, மனித உரிமை மீறல் உட்பட பல்வேறு மனிதாபிமானமற்ற குற்றங்களை இலங்கை அரசு நிகழ்த்தியது. இதனையடுத்து இலங்கை வடக்கு மாகாணசபையில், தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடத்தப்பட்டது குறித்து, இலங்கை அரசு விசாரணை மேற்கொண்டால் நீதி கிடைக்காது என்பதால் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார். இந்நிலையில், இலங்கை ராணுவம் குற்றம் இழத்திருந்தால், அதன் உண்மை தன்மையை தெரிந்துகொள்ள முயற்சிப்பது தவறு இல்லை என்று அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் மங்கள சமரவீரா தெரிவித்துள்ளார். மேலும் போர் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் சர்வதேச ஆலோசனைகள் பெறப்படும் என்று மங்கள சமரவீரா கூறியுள்ளார்.