தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம், திற்பரப்பு அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை…!

633

தென்மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. வெள்ளப்பெருக்கை அடுத்து குற்றாலம், திற்பரப்பு அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் முக்கிய அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் தாமிரபரணி, கோதையாறு, மஞ்சளாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைப்புரண்டு ஓடுவதால் விவசாயிகள், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பறித்து கொட்டுவதால், பொதுமக்கள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.