குற்றாலத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

175

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த குற்றாலத்தில் தற்போது சீசன் நிலவி வருகிறது. தற்போது மிதமாக சாரல் மழை பெய்து வருவதால் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குற்றச் செயல்கள் நடைபெறாமல் இருக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் சுற்றுலாவுக்கு வரும் சிலர் மது அருந்திவிட்டு வாகன ஓட்டுவதாக புகார் எழுந்தது. இதுவரை சுமார் 500 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.