குற்றால அருவியில் குளிக்க 2 நாட்கள் தடை..!

310

குற்றால அருவியில் குளிக்க, இரண்டு நாட்கள் தடைக்குப் பின், சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்கிறது. இதனால், குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து, கடந்த 2 நாட்களாக குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அருவிகளில் நீர்வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நம்பி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தினால் திருக்குறுங்குடி வனப்பகுதியில் உள்ள நம்பிக்கோவிலுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. களக்காடு புலிகள் காப்பகமும் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.