குற்றாலம் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி..!

237

குற்றாலம் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம், தென்காசி, செங்கோட்டை, நல்லூர் ஆகிய பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சீசன் தொடங்குவதற்கு முன்பே அருவியில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக குற்றாலம் அருவியில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.