கர்நாடகத்து நாற்காலிக்காக மத்திய அரசு நாடகம் நடத்துகிறது – டுவிட்டரில் கமல்ஹாசன் குற்றச்சாட்டு..!

421

தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க மறுப்பது, கர்நாடகத்து நாற்காலிக்காக மத்திய அரசு நடத்தும் நாடகம் என மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல்ஹாசன் குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பாகிஸ்தானோடு, வங்க தேசத்தோடு நதி நீரை இந்தியா பகிர்ந்து கொள்வதை சுட்டிக் காட்டியுள்ளார். தன் நாட்டிற்குள் தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் காவிரி நீரை பகிர்ந்து தர மத்திய அரசால் முடியாதா என கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார். இது இயலாமை அல்ல இழிவான அரசியல் என சாடியுள்ள அவர், கர்நாடகத்து நாற்காலிக்காக நடத்தும் நாடகம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.