குற்றாலத்தில் மூன்று நாள் சாரல் விழா தொடங்கியது. இதனை அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

324

குற்றாலத்தில் மூன்று நாள் சாரல் விழா தொடங்கியது. இதனை அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த குற்றலாத்தில் ஆண்டுதோறும், ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களை கட்டியிருக்கும், இந்த நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், சுற்றுலாப்பயணிகள் வந்து குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ்வார்கள். இங்கு ஆண்டுதோறும் சாரல் விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சாரல் விழா நேற்று நடைபெற்றது. இதற்கான விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். விழாவையொட்டி சுற்றுலாப்பயணிகளை மகிழ்விப்பதற்காக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.சாரல் விழாவையொட்டி இன்று மலர் கண்காட்சியும், நாளை படகுப்போட்டி மற்றும் நாய் கண்காட்சியும் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 2ம் தேதி யோகா, மினி மாரத்தான் மற்றும் வில்வித்தை போட்டிகளும் நடத்தப்படுகின்றன. ஆகஸ்ட் 6ம் தேதி சாரல் விழா நிறைவு பெறுகிறது.