தஞ்சை அருகே விவசாயம் செழிக்க வேண்டி, மாரியம்மன் கோயிலில் ஆயிரத்து 8 குத்துவிளக்குகள் ஏற்றி பூஜைகள் செய்யப்பட்டது.

379

தஞ்சை அருகே விவசாயம் செழிக்க வேண்டி, மாரியம்மன் கோயிலில் ஆயிரத்து 8 குத்துவிளக்குகள் ஏற்றி பூஜைகள் செய்யப்பட்டது.
பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடாததால் தொடர்ந்து, 5-வது ஆண்டாக தஞ்சையில் குறுவை, சம்பா சாகுபடிகள் பொய்த்துள்ளது. இந்த நிலையில், உலக அமைதிக்காக, காவிரியில் இருந்து தண்ணீர் வரவேண்டும் மற்றும் விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூரில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு, ஆயிரத்து 8 குத்துவிளக்கேற்றி, மனமுருக பிராத்தனை மேற்கொண்டு, அம்மனை வழிபட்டனர்.