தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மாற்றத்தை கொண்டு வர உழைப்போம் என குஷ்பு தெரிவித்துள்ளார்.

217

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மாற்றத்தை கொண்டு வர உழைப்போம் என குஷ்பு தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 5-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு, விஷால் அணி சார்பில் நடிகை குஷ்பு போட்டியிடுகிறார். இயக்குநர் டி.ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், இயக்குநர் திருமலை ஆகியோரும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.

இது தொடர்பாக குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், விஷால் அணியினர் தன்மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்ற பெரிய பொறுப்புக்கு போட்டியிட நிறுத்தியமைக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார். விஷால் அணியுடன் சேர்ந்து சிறப்பாக பணியாற்ற இருப்பதில் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், தயாரிப்பாளர் சங்கத்தில் மாற்றத்தை கொண்டு வர கடினமாகவும் நேர்மையாகவும் உழைப்போம் எனவும் குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.