தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலில் விஷால் அணி சார்பாக நடிகை குஷ்பு களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

240

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலில் விஷால் அணி சார்பாக நடிகை குஷ்பு களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் பிரதிநிதிகள் போட்டியிட போவதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, விஷாலுக்கும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கும் தொடர்ச்சியாக மோதல் ஏற்பட்டது. மோதலின் உச்ச கட்டமாக தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் நீக்கப்பட்டார். இதனால், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தனது அணியின் சார்பில் குஷ்பு தலைவராக போட்டியிடுவார் என விஷால் அறிவித்துள்ளார். தயாரிப்பாளர் தாணு தலைமையில் ஒரு அணியும், டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் இந்த தேர்தலில் போட்டியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.