கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் : நடிகை குஷ்பு மேட்டூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்..!

431

கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, நடிகை குஷ்பு மேட்டூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
பெண்களின் கற்பு குறித்து கடந்த 2005-ம் ஆண்டு வார இதழ் ஒன்றிற்கு குஷ்பு பேட்டி அளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாமக வை சேர்ந்த வழக்கறிஞர் முருகன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் ஆஜராக வந்த குஷ்பு மீதும், அவரின் கார் மீதும் நீதிமன்றத்தில் இருந்த சிலர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் குஷ்பு இன்று மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். நடிகை குஷ்புவுடன், காங்கிரஸ் கட்சியினரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.