குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்..!

336

குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால், அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால், ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தந்துள்ளனர். அங்குள்ள அருவிகளில் ஆனந்த குளியலிட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர். மக்கள் கூட்டம் அதிகம் என்பதால் பாதுகாப்பு பணியில் ஏராளமான காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே பேரருவியில் குப்பை பொறுக்கும் தொழிலாளி பழனி என்பவர், பாறையில் வழுக்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.