சிலை கடத்தல் வழக்கு : புதுச்சேரி பெண்ணை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவு

146

சிலை கடத்தில் வழக்கில் தேடப்பட்ட புதுச்சேரி பெண்ணை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துபாயில் இருந்து சென்னைக்கு வந்த புதுச்சேரியை சேர்ந்த மேரி தெரசா ஆனந்தி வனினா என்பவரை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, 2016ம் ஆண்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது, 11 புராதான சிலைகள் வீட்டில் பதுக்கி வைத்திருந்தவர் என்பதும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இவரை தேடி வந்தததும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து ஆனந்தி வனினா நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், இன்று கும்பகோணம் நீதிமன்றம் முன்பு சிலை கடத்தல் தடுப்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து ஆனந்தி வனினா போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.