கும்பமேளா விழாவிற்காக 4300 கோடி ரூபாய் ஒதுக்கீடு..!

153

உத்திரப் பிரதேச மாநிலம் பிரியாகராஜில் நடைபெறவுள்ள கும்பமேளா விழாவிற்காக 4300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தில் பிரியாகராஜ் என பெயர்மாற்றம் செய்யப்பட்ட அலகாபாத்தின் முதல் கும்பமேளா வரும் ஜனவரி 15-ஆம் நாள் தொடங்கி மார்ச் மாதம் 4ம் தேதி வரை வெகு விமர்சையாக நடைப்பெறவுள்ளது.உலக புகழ் பெற்ற இந்த விழாவில் கலந்துக்கொள்ள சுமார் 5000 வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தாயகம் வரும் மக்களுக்கு ஏதுவாக உலகின் மிக பெரிய அதிநவீன வசதிகளுடன் தற்காலிக குடியிறுப்பு கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பிரியாகராஜ் நகரை ஒளிர் விளக்குகளால் அலங்கரிக்க 40,000 LED விளக்கு வடிவமைப்புகள் திட்டமிடப்பட்டு அதனை ஒளியூட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்தாண்டு கும்பமேளாவிற்கு 12 கோடி பக்தர்கள் வரை வருகை புரிவர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அலைகடலாய் திரண்டு வரும் பக்தர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்மரமாக நடைப்பெற்று வருகிறது. உலகின் மிகப்பெரிய கலாச்சார மற்றும் சமய நிகழ்வு என பிரகடனம் செய்யப்படும் கும்ப மேளா UNESCO-வின் உலக பாரம்பரியத் தகுதியைப் பெற்றுள்ளது. இந்தாண்டு நடைபெறும் கும்பமேளாவில் 192 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.