கும்பமேளா விழா 15ம் தேதி தொடக்கம் |15 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு

108

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள கும்பமேளா விழாவில் பங்கேற்பதற்காக சாதுக்களும் பக்தர்களும் வரத்தொடங்கியுள்ளனர்.

பிரக்யா ராஜ் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ள அலகாபாத், ஹரித்துவார், உஜ்ஜைன், நாசிக் உள்ளிட்ட நகரங்களில் இந்த விழா கொண்டாடப்படுகிறது.இந்தியாவின் மாபெரும் ஆன்மீக விழாவான கும்பமேளாவில் கங்கையிலும் யமுனையிலும் பல லட்சம் பேர் திரண்டு புனித நீராடவது வழக்கமாகும். கும்பமேளாவின் போது காணாமல் போன புராண காலத்தின் சரஸ்வதி நதியும் கங்கை யமுனை போன்ற புண்ணிய நதிகளுடன் சங்கமிப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். சாதுக்கள் பலர் யானை மீது பவனி வந்தும் சிலம்பாட்டம் ஆடியும் கும்பமேளாவை கொண்டாட தயாராகி வருகின்றனர். ஜனவரி 15ம் தேதி தொடங்கி எட்டு வார காலம் இந்த விழா நடைபெறுவதால் பக்தர்கள் தங்குவதற்காக அதிநவீன வசதிகளுடன் நூற்றுக்கணக்கான குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.கழிவறை, குடிநீர், மின்சாரம், போக்குவரத்து, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இத்திருவிழாவைக் காண ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் வரத்தொடங்கியுள்ளனர். இந்த விழாவில் பங்கேற்க 15 லட்சம் பேர் வருகை தருவார்க என எதிர்பார்க்கப்படுவதால் அதிநவீன கூடார நகரில் 600 சமையலைறைகள், ஒரு லட்சம் கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.