94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த தினம் : நினைவிடத்தில் பெற்றோர்கள் கண்ணீர் அஞ்சலி !

236

கும்பகோணம் பள்ளி தீ விபத்து தினத்தை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும் என்று குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய 94 குழந்தைகள் உயிரிழந்த கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 13ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி காலை 9 மணியளவில் தீ விபத்து நடைபெற்ற ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியின் முன்பு ஒன்று கூடிய பெற்றோர்கள், மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் பள்ளி தீ விபத்து நடந்த தினத்தை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.