கும்பகோணம் அருகே ராகுகோவிலில், உலக நலன் வேண்டி 25 ஆயிரம் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

281

கும்பகோணம் அருகே ராகுகோவிலில், உலக நலன் வேண்டி 25 ஆயிரம் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கும்பகோணம் அருகேயுள்ள ராகுதலமான நாகநாத சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் உலக நலன் வேண்டி தீபங்கள் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. அதன்படி, ஆடி மாதம் சஷ்டி நாளன்று 25 ஆயிரம் தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. 32 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழிபாடு, உலக நலன் வேண்டியும், விவசாயம் செழிக்கவும் நடத்தப்படுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர். இந்திய வரைபடம், சிவலிங்கம், ஓம் என பல்வேறு வடிவங்களில் தீபங்கள் ஏற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.