கிராமப்புற வங்கிகளுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் வழங்காத ரிசர்வ் வங்கியை கண்டித்து, கும்பகோணத்தில் கிராம வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

263

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பெரிய கடைவீதியில் உள்ள மத்திய கூட்டுறவு சங்கம்முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்போது, கிராம தொடக்க கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன. கிராமப்புற வங்கிகளுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை வழங்காத ரிசர்வ் வங்கியை கண்டித்து அவர்கள் கண்டன கோஷங்களையும் எழுப்பினர். வங்கி ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் பிச்சைக்கண்ணு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மாநில பொதுச்செயலாளர் சுரேஷ், தஞ்சை, திருவாரூர் மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்