மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு தஞ்சை, திருச்சி உள்ளிட்ட 4 அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளன

345

கும்பகோணத்தில் மாநில அளவிலான கால்பந்து போட்டிகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் போட்டியில் 16 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இதில் தஞ்சை, திருச்சி, கொரனாட்டுகருப்பூர், திருவாரூர் உள்ளிட்ட 8 அணிகள் முதல் சுற்றில் தேர்வு செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து நடந்த போட்டியில், கொரனாட்டு கருப்பூர் அணி, தஞ்சை ராஜராஜன், தஞ்சை பூமி, திருச்சி ஆகிய 4 அணிகளும் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.