குமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் திடீர் நிலஅதிர்வு. பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்.

283

குமரி மாவட்டத்தில் பல பகுதிகளில் திடீர் நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம், வட்டக்கோட்டை மற்றும் குமரி கிராம பகுதிகளில் நேற்று இரவு திடீரென்று சப்தத்துடன் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். ஆனால் இந்த நில அதிர்வால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த லேசான நில அதிர்வை வீதிகளில் இருந்தவர்களும், மீன்பிடித்து கொண்டிருந்தவர்களும் உணர்ந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
ஏற்கனவே சுனாமியால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய அப்பகுதிமக்கள், இதுகுறித்து நிகழ்வுகளை முன்கூட்டியே தெரிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.