தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு படையினரின் சாகர் கவச் என்ற ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

209


தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு படையினரின் சாகர் கவச் என்ற ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

தீவிரவாதிகளின் கடல்வழி தாக்குதலை சமாளிக்க, தமிழகத்தின் பல்வேறு கடலோர மாவட்டங்களில் இரண்டு நாட்கள் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தின் நாகப்பட்டினம், வேதாரண்யம், கோடியக்கரை, சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் ஆபரேஷன் ஹாம்லா என்ற பெயரில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில், மத்திய மற்றும் மாநில உளவுத்துறை, கியூ பிரிவு காவல்துறை, கடலோர பாதுகாப்பு மற்றும் கடற்கரை போலீசார் உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தின.
இதேபோன்று, காரைக்கால் மாவட்டத்திலும் காவல்துறையினர் மற்றும் கடலோர காவல்துறையினர் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

தீவிரவாதிகளின் கடல்வழி தாக்குதலை எதிர்கொள்ளும் விதமாக, குமரி மாவட்டத்தில் காவல்துறையினர் பங்கேற்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
தீவிரவாதிகளின் கடல்வழி தாக்குதலை சமாளிக்க, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இரண்டு நாட்கள் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, குமரி மாவட்டம் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து நீரோடி வரையிலான கடல் பகுதிகளில் இந்த நிகழ்வு நடைபெற்றது. உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து கடலோர பாதுகாப்பு படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமம் உள்ளிட்டோர் ஒத்திகையில் ஈடுபட்டனர். “சாகார் காவச்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஒத்திகைக்கு 4 அதி நவீன ரோந்து படகுகள் பயன்படுத்தப்பட்டன.