சிலை கடத்தல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி இருப்பது தேவையற்றது : மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

414

சிலை கடத்தல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி இருப்பது தேவையற்றது என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிலை கடத்தல் விவகாரத்தை காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல் மிக சிறப்பாக கையாண்டு வருகிறார் என்றார். எண்ணற்ற சிலைகளை அவர் மீட்டு கொண்டு வந்துள்ளதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார். சிலை கடத்தல் விவகாரத்தை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு முடிவு எடுத்த நிலையில், பாஜக பொறுத்தவரை ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் இதனை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.