கன்னியாகுரி அருகே பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஐக்கிய மனித பாதுகாப்பு கழகத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

253

ராஜாக்கமங்கலம், ராமன் புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைகள் பழுதடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. குண்டும், குழியுமாக உள்ள சாலைகளால் அடிப்படி விபத்து நிகழ்வதாகவும், இதனால் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனக்கோரி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஐக்கிய மனித பாதுகாப்பு கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போக்குவரத்து நெருக்கடியை போக்க நான்கு வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.