குமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக எலுமிச்சை பழம் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

221

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக கோடைவெப்பம் குறைந்து குளுமையான கால நிலை நிலவி வருகின்றது. இதன் காரணமாக எலுமிச்சை பழத்தின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. மேலும் விருதுநகர், சங்கரன் கோவில், கடையம், ஆகிய இடங்களில் இருந்தும் மிகுதியான எலுமிச்சை பழங்களின் வரத்து இருக்கின்றது. இதனால் கடந்த மாதம் 10 ரூபாய்க்கு விற்ற ஒரு பழம் தற்போது 2 ரூபாய் முதல் 3 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. கடந்த கோடை காலத்தில் தங்களுக்கு நல்ல வருவாய் கிடைத்ததாகவும் தற்போதுள்ள இந்த சூழ்நிலையில் எலுமிச்சை பழ விலை சரிவினால் பெரும் நஷ்டம் ஏற்படும் நிலைக்கு உள்ளாகியிருப்பதாகவும் எலுமிச்சை பழ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.