குமரி திருவிழாவின்போது, நடைபெற்ற நாய் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது..!

223

குமரி திருவிழாவின்போது, நடைபெற்ற நாய் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

உலக புகழ்பெற்ற சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், குமரி திருவிழா நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான குமரி திருவிழா, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் மாணவ, மாணவிகள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின், கிராமிய இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதன் தொடர்ச்சியாக நாய் கண்காட்சி நடைபெற்றது. இதில் நாட்டு நாய்கள், கோம்பை, டாபர்மென், ராஜபாளையம், பொம்மேரியன் உள்ளிட்ட ஏராளமான நாய்கள் கலந்து கொண்டு, தங்கள் திறமையை வெளிப்படுத்தின. நாய் வளர்ப்பவர்களின் கட்டளைப்படி, நாய்கள் பலவிதமான சாகசங்களை செய்து காட்டிaது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.