கன்னியாகுமரி அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், உயர்நீதிமன்ற உத்தரவால் இடித்து அகற்றப்பட்டதால் பரபரப்பு..!

260

கன்னியாகுமரி அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், உயர்நீதிமன்ற உத்தரவால் இடித்து அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகேயுள்ள செண்பகராமன்புரத்தில், 7 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும், அதனை அகற்றகோரியும் சமூக ஆர்வலர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், புறம்போக்கு நிலத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதை உறுதி செய்தது. இதைத்தொடர்ந்து, வீட்டில் வசிப்பவர்களுக்கு நீதிமன்றம் 3 முறை நோட்டீஸ் அனுப்பியது. இந்தநிலையில் வருவாய்த்துறை மண்டல துணை வட்டாட்சியர் முருகன் தலைமையில், வீடுகளில் உள்ள பொருட்கள் அகற்றப்பட்டு, ஜேசிபி உதவியுடன் வீடுகள் இடிக்கப்பட்டன. இதற்கு வீடுகளில் குடியிருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.