கொழு கொழு குழந்தைகளுக்கான போட்டியில் 25 க்கும் மேற்பட்ட அழகான குழந்தைகள் பங்கேற்பு..!

124

கன்னியாகுமரியில் நடைபெற்ற கொழு கொழு குழந்தைகளுக்கான போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

குமரி திருவிழா என்ற பெயரில் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் குழந்தைகளுக்கான எடைப் போட்டி கன்னியாகுமரியில் நடைபெற்றது. இதில், 25 க்கும் மேற்பட்ட அழகான குழந்தைகள் தங்களது பெற்றோருடன் கலந்து கொண்டன. போட்டியில் பங்கேற்ற குழந்தைகளின் எடை அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டன. குழந்தைகளுக்கான கொழு கொழு போட்டி ஏராளமான பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.